இந்தியாவில் மேலும் 38,949 பேருக்கு கொரோனா; 542 பேர் சாவு
1 min read
Corona for another 38,949 in India; 542 deaths
16.7.2021
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,01,83,876 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 40,026 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவல் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 38,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,10,26,829 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 542 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,12,531 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,01,83,876 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 40,026 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,30,422 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 39,53,43,767 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.