புதுச்சேரியில் நீட் தேர்வு உண்டு; அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
1 min read
Puducherry has NEET selection; Minister Namachchivayam confirmed
16/7/2021
‛‛நீட் தேர்வு என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு, நாம் மத்திய அரசின் கீழ் இயங்குகிறோம். அதனால் இங்கு நீட் தேர்வு உண்டு,” என்று புதுச்சேரி கல்வியமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
புதுச்சேரியில் கல்வி அமைச்சராக பாரதீய ஜனதாவைச் சேர்ந்த நமச்சிவாயம் பொறுப்பேற்றுள்ளார். அவர் கல்வித்துறை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் தான் தேர்வு நடத்த வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இதுதொடர்பாகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களிடம் பேசிவிட்டு, அனைத்துக் கல்லூரிகளுக்கும் ஆன்லைனில் தான் தேர்வு நடத்த வேண்டும் என கடிதம் அனுப்பியுள்ளேன்.
தனியார் பள்ளிகள் முழுக் கட்டணம் வசூலிப்பதாக அரசிடம் புகார் வந்துள்ளது. இதுதொடர்பாகக் கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நீட் தேர்வு
நீட் தேர்வு என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. நாம் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஓர் அரசு. எனவே, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தான் நம்முடைய அரசை நடத்த முடியும். அதனால் இங்கு நீட் தேர்வு உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.