தமிழகத்தில் இன்று 2,205 பேருக்குக் கொரோனா; 43 பேர் சாவு
1 min read
Corona for 2,205 people in Tamil Nadu today; 43 deaths
17/7/2021
தமிழகத்தில் இன்று 2,205 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 43 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா நிலை குறித்து இன்று மாலை பொது சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
2,312 பேருக்கு கொரேனா
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 28,590.
இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 2,312. இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,33,323.
சென்னையில் இன்று 137 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று சிகிச்சையில் பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) 1632 ஆகும்.
தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்த குணமாக 2,802 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதுவரை மொத்தம் 24,71,038 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
43 பேர் சாவு
இன்று கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 43 பேர் உயிரிழந்தனர். இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 33,695 பேர் இறந்துள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 8292 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 40 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் 6 பேர்.
இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோவையில் 241 பேருக்கும், சேலத்தில் 163 பேருக்கும், தஞ்சையில் 152 பேருக்கும், ஈரோட்டில் 143 பேருக்கும், சென்னையில் 137 பேருக்கும், திருப்பூரில் 132 பேருக்கும், செங்கல்பட்டில் 124 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லையில் இன்று 23 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று ஒருவர் இறந்துள்ளார். தென்காசியில் 14 பேர் உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழப்பு இல்லை. தூத்துக்குடியில் இன்று 20 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழப்பு இல்லை.