இந்தியாவில் 38,079 பேருக்குக கொரோனா; 560 பேர் உயிரிழப்பு
1 min read
Corona for 38,079 people in India; 560 casualties
17.7.2021
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 38,079 ஆக குறைந்துள்ளது. அதேபோல் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 424,025 ஆக குறைந்துள்ளது. ஒரு நாளில் 560 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் இன்றுறு காலை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 31,064,908.
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38,079.
இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,02,27,792
இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 43,916 குணம் அடைந்துள்ளனர்.
இன்று காலை வரை 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 560 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41,3091 ஆகும்.
தற்போது கொரோனாவுக்கு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 424,025 ஆகும்.
இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.