பிரதமருடன் சரத்பவார் சந்திப்பு
1 min read
Sarabjit meets PM
17.7.2021
டெல்லியில் பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் 50 நிமிடங்கள் சந்தித்து பேசினார்.
மோடியுடன் சந்திப்பு
மாநிலங்களவை எம்.பியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
இதனை பிரதமர் அலுவலகம் இரு தலைவர்களின் புகைப்படத்துடன் டுவிட் செய்து உள்ளது.
2022 ஆம் ஆண்டில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராகக சரத்பவார் போட்டியிடக்கூடும் என்ற யூகங்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இருந்தாலும் இந்த யூகங்களை சரத்பவார் மறுத்து உள்ளார்.
விவசாயிகள் பிரச்சினை
சரத்பவார் பிரதமருடனான சந்திப்பு 50 நிமிடங்கள் நடந்தது. இரு தலைவர்களும் புதிதாக அமைக்கப்பட்ட கூட்டுறவு அமைச்சகம் மற்றும் விவசாயிகள் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது.
பிரதமர் மோடியுடனான சந்திப்பில் இருவருக்கும் இடையே அரசியல் குறித்து விவாதிக்கப்படவில்லை என்று சரத்பவார் கூறினார்.
மேலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு முன்பு பிரதமர் மோடியுடன் இந்தியாவில் கொரோனா நிலைமை குறித்தும் விவாதித்ததாக சரத் பவார் தெரிவித்தார்.
இதுகுறித்து சரத்பவார் வெளியிட்டு உள்ள டுவிட்டில் பிரதமர் மோடியுடனான சந்திப்பில் தேசிய நலனுக்கான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதக்கப்படடதாக கூறி உள்ளார்.