இந்தியாவில் இதுவரை 44.39 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை
1 min read
44.39 crore corona samples have been tested in India
18/7/2021
இந்தியாவில் இதுவரை 44.39 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன என ஐ.சி.எம்.ஆர். தெரிவித்து உள்ளது.
கொரோனா பரிசோதனை
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் வேகம் சற்று குறைந்து வருகிறது. கொரோனா பரவலின் 2-வது அலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகள் காரணமாக நோய்த் தொற்றில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறியும் வகையில் பரிசோதனைகளும் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 19,36,709 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 44,39,58,663 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.