டெல்லி சென்றடைந்தார் மு.க.ஸ்டாலின்: நாளை குடியரசுத் தலைவருடன் சந்திப்பு
1 min read
MK Stalin arrives in Delhi: Meeting with the President tomorrow
18.7.2021
முதல்வராக பதவியேற்ற பின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் அவரை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் வரவேற்றனர். நாளை முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவரை சந்திக்கிறார்.
மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வராக, கடந்த மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அந்த காலகட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்திருந்த நிலையில், குடியரசுத்தலைவரை அவர் சந்திக்கவில்லை. கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், கடந்த மாதம் 17-ம் தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
இந்நிலையில், இரண்டாவது முறையாக இன்று டெல்லி செல்கிறார். இன்று மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்லும் அவரை, தமிழக எம்.பி.க்கள் வரவேற்றனர்.
அதன் பின் நாளை 19-ம் தேதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார். சந்திப்பு முடிந்த பின், நாளை இரவே சென்னை திரும்புகிறார்.
கருணாநிதி படம்
வருகிற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது சட்டமன்றத்தில் கருணாநிதியின் படத்தை திறக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆகையால்,
டெல்லி செல்வதோடு, கருணாநிதியின் படத்திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி உள்ளிட்ட அனைத்துக் கட்சி தலைவர்களை அழைக்கவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.