தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு
1 min read
Both Houses of Parliament adjourned till tomorrow due to continuous amalgamation
19.7.2021
தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது.
நாடாளுமன்றக் கூட்டம்
இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதனையடுத்து இடைத் தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அதன்பிறகு புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட மந்திரிகளை பிரதமர் மோடி மக்களவையில் அறிமுகம் செய்து வைக்க முயன்றபோது எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மக்களவை மதியம் இரண்டு மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை
இதன்பிறகு மாநிலங்களவையில் பிரதமர் மோடி புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட மந்திரிகளை அறிமுகம் செய்து வைக்க முயன்றார். அங்கும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாநிலங்களவையும் இரண்டு மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் ஒத்திவைப்பு
அதன்பின் மக்களவையும், மாநிலங்களவையும் 2 மணிக்கு கூடியது. அதன்பின்னரும் இரு அவைகளிழும் அமளி தொடர்ந்தது. இதனால் மாநிலங்களவை மூன்று மணி வரையும், மக்களவை 3.30 வரையும் ஒத்திவைக்கப்பட்டன.
இதன்பிறகு மீண்டும் அவைகள் கூடியபோதும் அமளி நீடித்தது. இதனையடுத்து இரு அவைகளும் நாளை காலை 11 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.