இந்தியாவில் மேலும் 38,164 பேருக்கு கொரோனா; 499 பேர் உயிரிழப்பு
1 min read
Corona for another 38,164 in India; 499 casualties
19/7/2021-
இந்தியாவில் மேலும் 38,164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. பேர் இறந்துள்ளனர். 499 பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா
கொரோனா 2- -வது அலையில் நாட்டில் பாதிப்புகள் திடீர் உச்சம் அடைந்தது. இதனை தொடர்ந்து, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் எண்ணிக்கை உயர தொடங்கியநிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பை விட இன்று சற்று குறைந்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 38,164 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 11 லட்சத்து 44 ஆயிரத்து 229 ஆக உள்ளது.
499 பேர் சாவு
கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 499 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,14,108 ஆக உயர்ந்து உள்ளது.
இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் 38,660 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 03 லட்சத்து 08 ஆயிரத்து 456 ஆக உயர்வடைந்து உள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.31 சதவீதமாக உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது வரை 4,21,665 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 40,64,81,493 ஆக அதிகரித்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.