பூமியை நோக்கி வரும் சிறுகோள்
1 min read
Asteroid coming towards Earth
21.7.2021
பூமியை நோக்கி ‘2008 கோ20’ என்ற சிறுகோள் அதிவேகத்தில் வருகிறது. அது வருகிற 24-ந் தேதி அன்று அது பூமியை கடந்து பறக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.
சிறு கோள்
சூரியனில் இருந்தோ, அல்லது வேறு கிரகத்தில் இருந்தோ சிதறிய துண்டுகள் சிறுகோள்கள் எனப்படுகின்றன. சூரிய குடும்பத்தில் இப்படி லட்சக்கணக்கான சிறுகோள்கள் உள்ளன. அவையும் சூரியனை வலம் வந்துக் கொண்டு இருக்கின்றன. அதில் ‘2008 கோ20’ என்ற சிறுகோள் தற்போது பூமிக்கு அருகில் உள்ளது. மணிக்கு 29 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இந்த சிறுகோளானது தாஜ்மகாலை போல் மூன்று மடங்கு பெரியதாகும் என்று நாசா கூறுகிறது. அதிவேகத்தில் இந்த கோள் பயணிப்பதால் அதன் பாதையின் குறுக்கே எது வந்தாலும் தகர்த்தெறியப்படும்.
இந்த சிறுகோள் 220 மீட்டர் விட்டம் கொண்டது. 287 கோடி கிலோ மீட்டர் தொலைவில் பறக்கிறது. அது பூமிக்கும் நிலவுக்கும் இடையேயான தொலைவை போன்று 8 மடங்காகும். அதனால் இந்த சிறுகோள் பூமியைக் கடந்து பாதுகாப்பாக நகரும் என்று நாசா கூறியுள்ளது. பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றாலும் நாசா தொடர்ந்து சிறுகோளை கண்காணித்து வருகிறது.