நினைவு நாள்- நடிகர்திலகம் சிவாஜி கணேசன் சிலைக்கு மரியாதை
1 min read
Remembrance Day – Tribute to the statue of actor Shivaji Ganesan
21–7-2021
நடிகர் திலகம் சிவாஜி கணசேன் 20-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி, சென்னை அடையாரிலுள்ள சிவாஜி மணிமண்டபத்தில், இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு தலைவரும், சிவாஜி சமூகநலப்பேரவை தலைவருமான கே.சந்திரசேகரன் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
காலை 11 மணிக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், நடிகர்திலகம் சிவாஜி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகரன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.