பெகாசஸ் விவகாரம் தொடர்பாக சுப்ரீம்கோட்டில் பொதுநல மனு தாக்கல்
1 min read
Welfare petition filed in the Supreme Court in connection with the Pegasus affair
22.7.2021
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பெகாசஸ் உளவு
இந்தியாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மத்திய மந்திரிகள், பத்திரிகையாளர்கள் உள்பட 300 பேரின் செல்போன்கள் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் எதிர்க்கட்சிகள், மத்திய அரசை விமர்சனம் செய்து, நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. மத்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவித்திருந்த போதிலும், பெகாசஸ் விவகாரம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பூகம்பமாக வெடித்துள்ளது.
பெகாசஸ் விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது.
சுப்ரீம் கோர்ட்டு
இந்நிலையில், பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக டெல்லி சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க கோரி வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா என்பவம் மனு தாக்கல் செய்துள்ளார்.