June 30, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழ்நாடு உள்பட 12 மத்திய பல்கலை துணை வேந்தர்கள் நியமனம்; ஜனாதிபதி ஒப்புதல்

1 min read

Appointment of 12 Central University Vice Chancellors including Tamil Nadu; Presidential approval

23/7/2021
தமிழ்நாடு உட்பட 12 மத்தியப் பல்கலைக்கழகங்களில் மத்தியக் கல்வி அமைச்சகம் துணைவேந்தர்களை நியமித்ததற்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுகுறித்து மத்தியக் கல்வி அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:-

துணைவேந்தர்கள்

தற்போது 12 மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை ஒன்றியக் கல்வி அமைச்சகம் நியமித்ததற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதில் அரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு, ஜார்க்கண்ட், கர்நாடகா, தமிழகத்தில் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம், ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல கயாவில் உள்ள தெற்கு பிகார் மத்தியப் பல்கலைக்கழகம் , மணிப்பூர் பல்கலைக்கழகம், மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம், வடகிழக்கு மலை பல்கலைக்கழகம், பிலாஸ்பூர் மத்தியப் பல்கலைக்கழகம் மற்றும் குரு காசிதாஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருவாரூர் பல்கலைக்கழகம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றி வரும் கிருஷ்ணனை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமனம் செய்து மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இவர் அந்த பதவியில் இருப்பார்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.