நீட் தேநீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை; மக்களவையில் ஒன்றிய மந்திரி தகவல்
1 min read
There is no plan to cancel the NEET honey selection; Information of the Union Minister in the Lok Sabha
23.7.2021
கொரோனா 3வது அலை அச்சுறுத்தல் காரணமாக நீட் தேர்வை ரத்து செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு தொடர்பாக மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன், விழுப்புரம் எம்பி ரவிக்குமார் ஆகியோர் கேள்வி எழுப்பினர். அதற்கு ஒன்றிய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீன் பவார் பதிலளித்துள்ளார்.
“நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு செப்டம்பர் 12-ஆம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. கலை மற்றும் அறிவியல் படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்துவது பற்றி மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானும், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மான்டவியாவும் அண்மையில் ஆலோசித்து விரைவில் நீட் தேர்வு குறித்த முடிவுகள் வெளியாகும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.