அணைகள் இல்லாத மாவட்டங்களில் தடுப்பணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
1 min read
Barricades in districts without dams: Chief Minister MK Stalin’s advice
24.7.2021
அணைகள் இல்லாத மாவட்டங்களில் தடுப்பணை உருவாக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நீர்வளத்துறையின் செயல்பாடுகள், அத்துறையின் மூலம் செயல்படும் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை புனரமைத்து தூர்வாரி, நீரின் கொள்ளளவை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய நீர்நிலைகளை உருவாக்கவும், மழைநீர் மூலம் கிடைக்கும் நீரை முழுமையாக சேகரித்து பயன்படுத்தவும், அணைகள் இல்லாத மாவட்டங்களில் தடுப்பணைகள் உருவாக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.