இந்தியாவில் மேலும் 39,097 பேருக்கு கொரோனா; 546 பேர் உயிரிழப்பு
1 min read
Corona for a further 39,097 in India; 546 fatalities
24/7/2021
இந்தியாவில் மேலும் 39,097 பேருக்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. 546 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாநிலவரம் பற்றி இன்று காலை சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 39,097 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,13,32,159 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 35,087 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களையும் சேர்த்து இது வரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,05,03,166 ஆகும்.
546 பேர் சாவு
நாடு முழுவதும் கொரோனாவுக்கு நேற்று 546 மரணம் அடைந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவை கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4,20,016 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 42,78,82,261 ஆகும்.