மராட்டியத்தி்ல் தொடரும் கனமழை, நிலச்சரிவுக்கு 136 பேர் பலி
1 min read
Heavy rains continue in Maratha, landslide kills 136
24-7-2021
மராட்டியத்தி்ல் தொடரும் கனமழை, நிலச்சரிவுக்கு 136 பேர் பலியாகி உள்ளனர்
கனமழை
மராட்டிய மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கொங்கன் மண்டலத்தில் உள்ள ராய்காட் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக இடைவிடாது பெய்த கனமழையால், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
ராய்காட் மாவட்டம், மகாத் பகுதியில் பெய்ந்த கனமழையால் மலைப்பகுதியான தெலி கிராமத்தில் நேற்று இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் அந்த கிராமத்தில் உள்ள ஏராளமான வீடுகளும், அதில் குடியிருந்தவர்களும் மண்ணில் புதைந்தனர்.
மராட்டிய மாநில பேரிடர் மீட்பு பணித்துறை அமைச்சர் விஜய் தெரிவித்து உள்ளதாவது:
உடல்கள் மீட்பு
தெலி கிராமத்தில் மண்ணில் புதையுண்டவர்களில் 36 பேரின் உடல்கள் முதல்கட்டமாக மீட்கப்பட்டன. கடற்படையின் இரு குழுக்கள், மாநில மீட்புப் படையின் 12 குழுக்கள், கடலோரப் படையின் 2 குழுக்கள், தேசிய பேரிடர் மீட்புப்படை சார்பில் 3 குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கிருந்து தொடர்ந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
136 பேர் பலி
மாநிலம் முழுவதும் மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 136 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் ஆறு மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ கொடுத்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.