கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா;கட்டுப்பாடுகள் அறிவிப்பு
1 min read
Increasing corona in Kerala; Increase in controls
24.7.2021
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த வியாழக்கிழமை 35 ஆயிரமாக இருந்தது. அது வெள்ளிக்கிழமை39 ஆயிரத்தை தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 39,097 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்திய அளவில் கொரோனா பாதிப்பு கூடுவதற்கு கேரளாவில் கடந்த 50 நாட்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதான் காரணம் என்று கூறப்படுகிறது.
கேரளாவில் கடந்த வியாழக்கிழமை 12,818 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் நேற்று (வெள்ளிக்கிழமை) புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,518 ஆக உயர்ந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை, 1,28,489 மாதிரிகள் மட்டும் பரிசோதிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு சதவீதம் 13.6 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக மலப்புரம் மாவட்டத்தில் பாதிப்பு சதவீதம் 17ஆக உள்ளது. இதேபோல திருச்சூர், கோழிக்கோடு, எர்ணாகுளம், கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது.
கட்டுப்பாடுகள்
கேரளாவில் இப்படி கொரோனா பாதிப்பு உயர்வதுற்று சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளே காரணம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அம்மாநிலத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளை முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அதன்படி மத்திய – மாநில அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டும் இயங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கவும், ஓட்டல் மற்றும் டீ கடைகளில் பார்சல் மட்டும் வழங்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவும், தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்தவும் அரசு உத்தரவிட்டு உள்ளது.