July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: வெள்ளி வென்றார் மீராபாய் சானு

1 min read

India’s first medal in Olympics: Mirabai Sanu wins silver

24-7-2021

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. பளுதூக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு (49 கி.கி.,) வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

ஒலிம்பிக் போட்டி

ஜப்பானில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் பெண்களுக்கான பளுதுாக்குதல் 49 கி.கி., எடைப்பிரிவில் ‘ஸ்னாட்ச்’ பிரிவில் 87 கிலோ, ‘கிளீன் அன்ட் ஜெர்க்’ பிரிவில் 115 கிலோ என, மொத்தம் 202 கிலோ பளுதுாக்கிய இந்தியாவின் மீராபாய் சானு, 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் ஆனது. தவிர, ஒலிம்பிக் பளுதுாக்குதலில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம்.

ஏற்கனவே 2000ம் ஆண்டு சிட்னியில் நடந்த ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி, வெண்கலம் வென்றிருந்தார். சீனாவின் ஹோ ஜிஹுய் (210 கிலோ) தங்கப் பதக்கம் வென்றார். இந்தோனேஷியாவின் ஐசா விண்டி கேன்டிகா (194 கிலோ) வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

பிரதமர் மகிழ்ச்சி

மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்றதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். அவர் டுவிட்டரில்ர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
மீராபாய் சானுவின் அற்புதமான திறமையால், இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. அவரது வெற்றி, ஒவ்வொரு இந்தியரையும் ஊக்கப்படுத்துகிறது.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

நாட்டுக்கு அர்ப்பணம்

இந்த வெற்றி தொடர்பாக மீராபாய் பாறு டுவிட்டரில் பதிவிட்டு உள்ளதாவது:

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற என்னுடைய கனவு நனவாகி உள்ளது. என்னுடைய இந்த பதக்கத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். இந்த பயணத்தில் என்னுடன் இருந்து எனக்காக பிரார்த்தனை செய்த கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு இந்தநேரத்தில் நன்றி தெரிவிக்கிறேன்.
என்னுடைய குடும்பத்திற்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவிக்கிறேன். குறிப்பாக எனது தாயார், எனக்காக ஏராளமான தியாகங்களை செய்துள்ளார். என் மீது அதிகமான நம்பிக்கை வைத்துள்ளார்.
எனக்கு ஆதரவு அளித்த இந்திய அரசு, விளையாட்டுத்துறை அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையம், இந்திய ஒலிம்பிக் அமைப்பு, இந்திய பளுதூக்குதல் அமைப்பு, ரெயில்வே, என்னுடைய ஸ்பான்சர்கள், என்னுடைய மார்க்கெட்டிங் நிறுவனம் ஆகியோரின் தொடர்ச்சியான ஆதரவுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்கிறேன்.

என்னுடைய பயிற்சியாளர் விஜய் சர்மாவுக்கு சிறப்பு நன்றியும், எனது குழுவினரின் கடின உழைப்பு, ஊக்கம், பயிற்சி ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கிறேன். ஒட்டுமொத்த பளுதூக்கும் பிரிவினருக்கும் என்னுடைய தேசத்திற்கு மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன். ஜெய்ஹிந்த்.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.