அசாமில் நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் மரணம்
1 min read
Tamil Nadu soldier killed in landslide in Assam
24.7.2021
அசாமில் பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டியம், அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பலத்த மழை பெய்து வருகிறது. மராட்டிய மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ள பாதிப்புகளை சிக்கி நேற்று முன்தினம் மாலை வரை 136 பேர் உயிரிழந்திருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 50க்கும் மேற்பட்டோரை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. 30 க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினர் மக்களை காப்பாற்றி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அசாம் மாநிலத்திலும் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் கதிர்வேல் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில், சிக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது உடல் விமானம் மூலம் இன்று இரவு 8.30 மணிக்கு மேல் தமிழகத்துக்கு கொண்டுவரப்படுகிறது.