June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 10.93 சதவீதமாக குறைந்தது

1 min read

In Kerala, the incidence of corona infection has come down to 10.93 per cent

2.7.2021

கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. நாட்டிலேயே தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் கேரளாதான் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது.

கேரள சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, “ மாநிலத்தில் நேற்று 13,984 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய 1,27,903 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு விகிதம் 10.93 சதவிகிதமாக குறைந்துள்ளது.
கேரளாவில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,65,322 ஆக உள்ளது. தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 15,923 ஆகும். கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16,955 ஆக உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.