பட்டியலின மக்கள் குறித்து அவதூறு: நடிகை மீரா மிதுன் கைது
1 min read
Actress Meera Mithun arrested for slander
14.8.2021
பட்டியலின மக்கள் குறித்து அவதூறு வெளியிட்ட நடிகை நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டார். கனவில்தான் என்னை கைது செய்ய முடியும் என்று போலீசாருக்கு சவால் விட்ட நடிகை மீராமிதுன் இப்போது கைதாகி உள்ளார்.
நடிகை மீராமிதுன்
நடிகை மீரா மிதுன் டுவிட்டர் பக்கத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், சினிமாவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள் பற்றியும் இழிவான கருத்துகள் பதிவிட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் மீராமிதுன் மீது 7 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜராகும்படி மீராமிதுனுக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
இருந்தபோதிலும் மீராமிதுன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதேவேளையில் என்னை கைது செய்ய முடியாது என்று மீராமிதுன் போலீசாருக்கு சவால் விட்டிருந்தார்.
கைது
இந்த நிலையில், நடிகை மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் நடிகை மீரா மிதுன் கைது செய்யப்பட்டுள்ளார்.