காபூலில் இருந்து 129 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் இந்தியா வந்தது
1 min read
An Air India flight with 129 passengers arrived in India from Kabul
15.8.2021
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை அழைத்து வர காபூல் சென்ற ஏர் இந்தியா விமானம் 129 பயணிகளுடன் இந்தியா வந்தது.
ஆப்கானிஸ்தானில் இந்தியர்கள்
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர காபூல் விரைந்தது ஏர் இந்தியா விமானம். இந்த விமானம் அங்கு பணியாற்றும் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், என அனைவரையும் அழைத்து கொண்டு ஏர் இந்தியா விமானம் இன்று இரவே தாயகம் திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்டமாக காபூலில் இருந்து 129 பயணிகளுடன் டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தியாவிற்கான கடைசி ஏர் இந்தியா விமானம் ஏஐ244 129 பயணிகளுடன் காபூலிலிருந்து தற்போது புறப்பட்டு டெல்லி விமான நிலையத்தை வந்தடைந்தது.
தாலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்.
இந்தியாவிலிருந்து வாரத்தில் மூன்று நாட்கள் காபூலுக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம், இனி இயக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.