டோக்கியோ ஒலிம்பிக்கில் 4வது இடம் பிடித்த இந்திய வீரர்களுக்கு கார் பரிசு
1 min read
Car prize for 4th place Indian athlete at Tokyo Olympics
15.8.2021
டோக்கியோ ஒலிம்பிக்கில் 4வது இடம் பிடித்த இந்திய வீரர்களுக்கு டாட்டா மோட்டார்ஸ் நிறுவனமானது அல்ட்ராஸ் கார் பரிசாக அறிவித்துள்ளது. கோல்ட் ஸ்டார்ன்டர்ட் வேரியன்ட் காரான இதனை வீரர்களுக்கு வழங்குவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்
டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடந்து முடிந்தது. இந்தப் போட்டியில், இந்திய வீரர்கள், வீராங்கனைகள் மொத்தம் 7 பதக்கங்களை தேசத்துக்கு வென்று கொடுத்தனர்.
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சில வீரர்கள், வீராங்கனைகள் நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை இழந்தனர்.
ஒலிம்பிக் வெற்றியாளர்களுக்கு ரொக்கப் பரிசு, கார், அரசு வேலை, பங்களா வீடு என பரிசுகள் குவிந்தன. நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை இழந்தவர்கள் அழுத்தத்தோடு ஏக்கத்துக்கும் ஆளாகினர்.
கார் பரிசு
இந்நிலையில், 4வது இடத்தைப் பிடித்த ஒலிம்பிக் வீரர்கள், வீராங்கனைகளுக்கு டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா அல்ட்ராஸ் கார் பரிசாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள டுவீட்டில், “டோக்கியோ ஒலிம்பிக்கில் நூலிழையில் பத்தக்கத்தைத் தவறவிட்ட வீரர்கள், வீராங்கனைகளுக்கு நன்றி உணர்வைத் தெரிவிக்கும் விதமாக, டாடா மோட்டார்ஸ் அல்ட்ரோஸ் காரை பரிசாக வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறது. அவர்கள் பதக்கத்தை வெல்லாமல் இருந்திருக்கலாம் ஆனால் அவர்கள் கோடிக்கணக்கானோரின் இதயங்களை வென்றுவிட்டார்கள். பலருக்கு ஊக்கமளித்துள்ளார்கள்” என்று பதிவிட்டுள்ளது. தங்களின் அறிவிப்பு 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வீரர்கள் வெற்றி பெற ஊக்கமளிக்கும் என நம்புவதாகவும் டாடா மோட்டாரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.