செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார்; ஒலிம்பிக் வீரர்களுக்கு கைத்தட்டி பாராட்டு
1 min read
Prime Minister Modi flagged off at the Red Fort; Applause for the Olympians
15.8.2021
நாடு முழுவதும் இன்று (ஆக.15) சுதந்திரதின 75 வது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார் பிரதமர் மோடி. தொடர்ந்து அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். முன்னதாக ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு செங்கோட்டையை சுற்றியுள்ள உயரமான கட்டடங்களில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் உரையாற்றிய இடத்திற்கும், பார்வையாளர்கள் அமர்ந்த இடத்திற்கும் இடையே பிரமாண்ட கன்டெய்னர்கள் தடுப்பு அரணாக முதன்முறையாக வைக்கப்பட்டன.
சுதந்திரதின விழாவில் வெளிநாட்டு தூதர்கள், மத்திய அமைச்சர்கள். ஒலிம்பிக்கில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். கொடியேற்றிய பின்னர் பிரதமர் நாட்டு மக்கள் இடையே உரை நிகழ்த்தினார்.
உரையை தொடங்கிய பிரதமர் ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்கு கைத்தட்டி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து விழாவில் பங்கேற்றவர்களும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் கொரோனா போராளிகள் , தடுப்பூசி தயாரித்தவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.