ஒரே நேரத்தில் 2 தடுப்பூசி செலுத்தப்பட்ட பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
1 min read
The woman who was vaccinated 2 times simultaneously was admitted to the intensive care unit
16.8.2021
திருவனந்தபுரத்தில் இளம்பெண்ணுக்கு ஒரே நேரத்தில் 2 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவர் தீவிரச சிகி்ச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
2 தடுப்பூசி
திருவனந்தபுரம், மணியரா என்ற இடத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் நேற்று திருவனந்தபுரம் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட சென்றார். அப்போது, அவருக்கு 2 செவிலியர்கள் அடுத்தடுத்து 2 கொரோனா தடுப்பூசி போட்டதாக தெரிகிறது.
இதனால் அந்தப் பெண்ணுக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. இதை தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டார். மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து சுகாதார துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.