நான் தான் ஆப்கன் அதிபர்; துணை அதிபர் அறிவிப்பு
1 min read
I am the Afghan President; Vice Chancellor’s Notice
17/8/2021
சட்டப்படி நான் தான் ஆப்கானிஸ்தானின் அடுத்த அதிபர் என அந்நாட்டு துணை அதிபர் அம்ருல்லாஹ் சலோ தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அதிபர்
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை முழுமையாக வாபஸ் பெறுவது என முடிவு செய்துள்ளதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அதிபர் முகமது அஷ்ரப் கனி , நாட்டை விட்டு வெளியேறினார்.
இந்த நிலையில் ஆப்கன் துணை அதிபர் அம்ருல்லாஹ் சலோ தான்தான் சட்டப்படி ஆப்கானிஸ்தான் அதிபர் என்று அறிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
தற்போதைய ஆப்கன் அரசியலமைப்பு சட்டப்படி அதிபர் இறந்துவிட்டாலோ, ராஜினாமா செய்துவிட்டாலோ, அல்லது நாட்டை விட்டு வெளியேறிவிட்டாலோ , சட்டப்படி துணை அதிபர் அதிபராக வர வேண்டும். அதன்படி அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறிவிட்டதால், நான் தான் அடுத்த அதிபர், சர்வதேச நாடுகளின் தலைவர்கள் ஒரு மித்த கருத்துடன் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும்
இவ்வாறு அவர் டுவிட் செய்துள்ளார்.