கொரோனா பாதிப்புக்காக கேரளாவுக்கு ரூ.267 கோடி ஒதுக்க மத்திய அரசு முடிவு
1 min read
The Union government has decided to allocate Rs 267 crore to Kerala for corona damage
17.8.2021
கொரோனா அதிகம் பாதித்த கேரளாவுக்கு மத்திய அரசு ரூ.267 கோடி ஒதுக்க முடிவு செய்துள்ளது.
கேரளா
கேரளாவில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரளாவில் ஆய்வு நடத்திய மத்திய குழு, ‘கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்’ என, கேரள அரசுக்கு பரிந்துரைத்தது.
இந்த நிலையில், கேரளாவில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
ஆலோசனை
இதையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன், சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் ஆகியோருடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மன்சுக் மாண்டவியா பதிவிட்டு உள்ளதாவது:
ரூ.267.35 கோடி
கொரோனா அவசரகால எதிர்வினை தொகுப்பு இரண்டின் கீழ் ரூ.267.35 கோடியை கேரளாவுக்கு ஒதுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்றை சிறப்பாகக் கட்டுப்படுத்துவதற்காக மாநிலத்தின் சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்த முடியும்.
இது தவிர, மருந்துகள் தொகுப்பை உருவாக்குவதற்காக மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.1 கோடி வழங்கப்படும். கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் தொலை மருத்துவ வசதிகளுக்கு ஆதரவளிக்கக் கூடிய உயர் சிறப்பு மையத்தை ஒன்றிய அரசின் ஆதரவுடன் நிறுவுவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.