தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் மரணம்
1 min read
Mother Saundarajan’s mother dies
18.8.2021
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயாரும் குமரிஅனந்தனின் மனைவியுமான கிருஷ்ணகுமாரி மரணம் அடைந்தார்.
தமிழிசை தாயார்
புதுச்சேரி துணை நிலை கவர்னரும் தெலுங்கானா கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி (வயது76). இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரிஅனந்தனின் மனைவி ஆவார்.
கிருஷ்ணகுமாரி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை தெலுங்கானாவில் காலமானார். அவரது உடல் தெலுங்கானாவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நாளை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டு நாளை நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.