சிறை கைதியாக வாழ ரூ.500 கட்டணம்; கர்நாடகம் ஏற்பாடு
1 min read
Rs.500 to live as a prison inmate; Organized by Karnataka
18.8.2021
ரூ.500 செலுத்தி, சிறை வாழ்க்கை எப்படி இருக்கும்? என்பதை அறிந்து கொள்ளும் திட்டத்தை கர்நாடக மாநிலம் ஹிண்டல்கா மத்திய சிறைச்சாலை அதிகாரிகள் அறிமுகப்படுத்தி உள்ளனர்.
சிறை கைதி
விடுமுறை காலங்களில், ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, ஷிம்லா உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்லவே பெரும்பாலானோர் விரும்புவர். அதில் ஒரு சிலர், சிறை சென்று, அங்கு எப்படி இருக்கும்? என்பதை பார்க்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால், அதற்கான வழிகள் அவர்களுக்கு இல்லாமல் இருந்தது.
இதற்காகவே, கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள ஹிண்டல்கா மத்திய சிறைச்சாலை அதிகாரிகள், சிறைவாழ்க்கை என்பது எவ்வாறு இருக்கும்? என்பதை பொது மக்கள் அறிந்து கொள்வதற்காக புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளனர். அதன்படி, ரூ.500 கட்டணம் செலுத்தி, ஒரு நாள் முழுவதும் சிறைச்சாலையில் தங்கி, சிறை வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். இதை அமல்படுத்த மாநில அரசின் அனுமதிக்கு சிறை நிர்வாகம் திட்டத்தை அனுப்பி வைத்து உள்ளது.
சிறையில், கைதிகள் நடத்தப்படுவதை போன்றே பார்வையாளர்கள் நடத்தப்படுவார்கள். கைதிகளுக்கு வழங்கப்படும் உணவே, பார்வையாளர்களுக்கும் வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.