June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

ஆன்லைனில் இந்துத்வா எதிர்ப்பு மாநாடு; இந்து அமெரிக்க அறக்கட்டளை எதிர்ப்பு

1 min read

Online anti-Hindu conference; Hindu American Foundation protest

22.8.2021

“இந்துத்வா எதிர்ப்பு மாநாட்டை ஆதரிக்க வேண்டாம்” என, அமெரிக்க பல்கலைகளுக்கு இந்து அமெரிக்க அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்துத்துவா எதிர்ப்பு மாநாடு

உலகளவில் இந்துத்வா கொள்கை எதிர்ப்பு மாநாடு, ‘ஆன்லைன்’ வாயிலாக நடக்கவுள்ளது. இந்த மாநாட்டிற்கு அமெரிக்காவைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த மாநாட்டை நடத்துவோர், பங்கேற்போர் உள்ளிட்ட விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. எனினும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்துத்வா கொள்கையை எதிர்க்கும் முக்கிய புள்ளிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆதரவு அளிக்க வேண்டாம்

இதற்கு அமெரிக்காவில் உள்ள இந்து அமெரிக்க அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், ‘இந்துத்வா எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைக்கும் மாநாட்டிற்கு ஆதரவு அளிக்க வேண்டாம்’ என, அமெரிக்க பல்கலைகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. ‘இந்த மாநாடு கல்வி தொடர்பானது அல்ல; அரசியல் சார்ந்தது என்பதால் இதற்கு ஆதரவளித்தால், பல்கலைகளின் மதிப்பும், மாண்பும் பாழாகி விடும்’ என, இந்து அமைப்புகள், அமெரிக்க பல்கலைகளுக்கு தெரிவித்துள்ளன.

இதையடுத்து மாசாசூசெட்ஸ் பல்கலை, டல்ஹவுசி பல்கலை ஆகியவை மாநாட்டிற்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.