பகுஜன் சமாஜ் எம்.பி.யால் பலாத்காரம் கூறப்பட்ட பெண் உச்சநீதி மன்றம் அருகே தீக்குளித்து தற்கொலை
1 min read
A woman who was allegedly raped by a Bahujan Samaj MP has committed suicide by setting herself on fire near the Supreme Court
25.8.2021-
பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.யான அதுல் ராயால் பாலியல் பலாத்காரம் செய்யப்ப்டதாக கூறப்பட்ட இளம்பெண் உச்சநீதிமன்றம் முன்பு தீக்குளித்தார். அவர் இறந்து போனார்.
பாலியல் பலாத்காரம்
உத்தரப்பிரதேச பகுஜன் சமாஜ் கட்சி எம்.பியான அதுல் ராய் மீது இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலீசாரிடம் சரண் அடைந்த அதுல் ராய் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
சிறையில் இருக்கும் எம்.பிக்கு சலுகைகள் அளித்துவருவதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறி வந்தார். இந்த நிலையில் கடந்த 16ந் தேதி திடீரென டெல்லி உச்சநீதிமன்றம் வாயில் அருகே தனது காதலனுடன் தீக்குளித்தார். உயிருக்குப் போராடி வந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது காதலர் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.
தீக்குளிப்பதற்கு முன், அவர்கள் ஒரு பேஸ்புக் லைவ் வீடியோவை வெளியிட்டு இருந்தனர்.அதில் அந்த பெண் எம்.பி.அதுல் ராய், மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு நீதிபதி ஆகியோர் மீது குற்றஞ்சாட்டி இருந்தார்.