காபூல் விமானநிலையம் அருகே குண்டு வெடிப்பு; 10 பேர் பலி
1 min read
Blast near Kabul airport; 10 killed
26.8.2021
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சர்வதேச விமான நிலையம் அருகே இன்று ( சக்திவாய்ந்த குண்டு வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.இதில் 10 பேர் இறந்ததாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான்
ஆப்கானில் அமெரிக்க படைகள் விலக்கி கொண்டதையடுத்து அங்கு தலிபான்கள் முழுமையாக கைபற்றியுள்ளனர். இதனால் அங்குள்ள மக்கள் நாட்டை விட்டு வெளியேற விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று (ஆக.26) காபூல் சர்வதேச விமான நிலையம் அருகே சக்திவாயந்த குண்டு வெடித்ததாக அமெரிக்கா ராணுவ இணை அமைச்சர் ஜான் கிர்பே தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்..ஆயிரக்கணக்கான மக்கள் கூடியுள்ள அப்பகுதியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 10 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்ததாகவும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.