இந்தியாவில் புதிதாக 44,658 பேருக்கு கொரோனா; 496 பேர் சாவு
1 min read
Corona for 44,658 newcomers in India; 496 deaths
27.8.2021
இந்தியாவில் புதிதாக 44,658 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 496 பேர் கொரேனாவுக்கு இறந்தனர்.
கொரோனா 2-வது அலை
இந்தியாவில் கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் சமீப நாட்களாக குறைந்து வந்தது. எனினும், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்டு உள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 44,658 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இது நேற்று 46,164 மற்றும் நேற்று முன்தினம் 37,593 ஆக பதிவாகி இருந்தது. இதனால் தொடர்ந்து 2வது நாளாக 40 ஆயிரத்திற்கும் கூடுதலாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 3 கோடியே 26 லட்சத்து 3 ஆயிரத்து 188 ஆக அதிகரித்துள்ளது.
இன்று காலைவரை கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 32 ஆயிரத்து 988 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 18 லட்சத்து 21 ஆயிரத்து 428 ஆக அதிகரித்துள்ளது.
மொத்தம் 3 லட்சத்து 44 ஆயிரத்து 899 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
496 பேர் சாவு
இன்று காலை வரை ஒரு நாளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 496 (முந்தைய நளர் 607 பேர் இறந்தனர்.) ஆக உள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 36 ஆயிரத்து 861 ஆக அதிகரித்துள்ளது.