தமிழகத்தில் 1,542 பேருக்கு கொரோனா்; 21 பேர் சாவு
1 min read
Corona for 1,542 people in Tamil Nadu; 21 deaths
27.8.2021
தமிழகத்தில் இன்று 1,542 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 21 பேர் பலியானர்கள்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கடந்த 11-ந் தேதி 1,964 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடந்து தமிழகத்தில் பாதிப்பு குறைந்த வண்ணமே இருந்தது. அந்த வகையில் 15-வது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) 1,542-பேருக்கு கொரோனா தாக்கம் இருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று புதிதாக 1 லட்சத்து 62 ஆயிரத்து 487 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,542 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 21 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இன்று 1,793-பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை17,797 ஆக உள்ளது.
கோவையில் 231 பேருக்கும், சென்னையில் 162 பேருக்கும், செங்கல்பட்டில் 126 பேருக்கும், ஈரோட்டில் 122 பேருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
நெல்லையில் இன்று 16 பேருக்கும், தூத்துக்குடியில் 12 பேருக்கும், தென்காசியில் 11 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
கோவையில் இன்று 5 பேரும், சென்னை, திருப்பூரில் தலா 3 பேரும், ஈரோடு, காஞ்சிபுரம் தலா 2 பேரும், செங்கல்பட்டு, மதுரை, நாமக்கல் ராணிபேட்டை, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இறந்துள்ளனர்.