மணிப்பூர் மாநில கவர்னராக இல கணேசன் பதவியேற்பு
1 min read
Ila Ganesan sworn in as Manipur Governor
27.8.2021
மணிப்பூர் மாநில கவர்னராக இல கணேசன் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
இல.கணேசன்
மணிப்பூர் மாநில கவர்னராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவின் பதவிக்காலம் கடந்த 10-ந்தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து சிக்கிம் மாநில கவர்னர் கங்கா பிரசாத் சவுராசியா கூடுதல் பொறுப்பாக மணிப்பூரையும் கவனித்து வந்தார்.
இதையடுத்து, மணிப்பூர் மாநில புதிய கவர்னராக தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசனை நியமித்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆக. 22 ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் 17-வது கவர்னராக இல.கணேசன் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
அவருக்கு, அம்மாநிலத் தலைமை நீதிபதி ரகசியக் காப்பு பிரமாணம் செய்துவைத்தார். இந்நிகழ்வில், மணிப்பூர் மாநில முதல்வர் பிரண் சிங், எதிர்க்கட்சித் தலைவர், உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.