‘லிப்ட்’ அறுந்து விழுந்து விபத்து – 4 பேர் பலி
1 min read
‘Lift’ crashes – 4 killed
27.8.2021
ஜார்க்கண்டில் ‘லிப்ட்’ அறுந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
லிப்ட் அறுந்து விழுந்தது
ஜார்க்கண்ட் மாநிலத்தின் கொடர்மா மாவட்டத்தின் பஞ்ஷிட்ஹா பகுதியில் அனல்மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த கட்டுமான பணிகளை ஊழியர்கள் 4 பேர் ’லிப்ட்டில்’ (தானியங்கு மின்தூக்கி) ஏறி பார்வையிட்டனர். 80 அடி உயரத்தில் லிப்ட் இருந்தபோது லிப்டின் கம்பிகள் அறுந்து விழுந்தன.
இதனால், லிப்ட் வேகமாக தரையில் வந்து மோதியது. இந்த விபத்தில் லிப்டில் பயணம் செய்த 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.