கேரளாவில் 3-வது நாளாக 30 ஆயிரத்தை கொரோனா பதிவு கடந்தது
1 min read
The corona record crossed 30,000 on the 3rd day in Kerala
27.8.2021
கேரளா மாநிலத்தில் 3வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்தது. இன்று ஒரே நாளில் 32,801 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
கேரளாவில் கொரோனா
கேரள மாநில அரசு சார்பில் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
கேரளாவில் கொரோனா 2-வது அலை கட்டுக்கடங்காமல் உள்ளது. இன்று 3-வது நாளாக 30 ஆயிரத்தை கடந்து பாதிப்பு சென்றது. இன்று 32 ஆயிரத்து 801 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து 18,573 பேர் குணமடைந்த நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 37,30,198 பேர் ஆகும். ஒரே நாளில் 179 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,313 ஆகும். கேரளாவில் தற்போது 1,95,254 மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரு நாளில் அந்த மாநிலத்தில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 703 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதன் பாதிப்பு விகிதம் 19.22 சதவீதம் ஆகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தலை மீறுவதே கொரோனா அதிகரிப்புக்கு காரணம் என மாநில அரசு குற்றம்சாட்டுகிறது.