சாதிவாரி கணக்கெடுப்பை ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட கமிட்டி; தமிழகம் புறக்கணிப்பு
1 min read
7-member committee to study Sativari survey; Tamil Nadu boycott
4.9.2021
சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவரங்களை ஆய்வு செய்ய, ஏழு உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டியை காங்கிரஸ் தலைவர் சோனியா அமைத்துள்ளார். இதில், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இடம் அளிக்கப்படவில்லை.
சாதிவாரி கணக்கெடுப்பு
சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி, நாடு முழுதும் பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விவரங்களை ஆய்வு செய்ய, காங்கிரசில் 7உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டி ஒன்றை அந்த கட்சி தலைவர் சோனியா அமைத்துஉள்ளார்.
கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய்சிங் அமைப்பாளராக செயல்படும் இந்த கமிட்டியில், மூத்த தலைவர்கள் மோகன் பிரகாஷ், ஆர்.பி.என். சிங், குல்தீப் பிஷ்னோய், வீரப்ப மொய்லி, அபிஷேக் சிங்வி, சல்மான் குர்ஷித் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா சமீபகாலமாக தினமும் ஒரு கமிட்டியை அமைத்து வருகிறார்.
கடந்த வியாழக்கிழமை தேசிய பிரச்னைகளை முன்னிறுத்தி தொடர் போராட்டம் நடத்துவது பற்றி ஆலோசிக்க, திக்விஜய் சிங் தலைமையில் ஒன்பது உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டியை சோனியா அமைத்தார்.
தற்போது அமைக்கப்பட்ட கமிட்டியில், தமிழக காங்கிரசைச் சேர்ந்த ஒருவர் கூட இடம் பெறவில்லை. இது, தமிழக காங்கிரஸ் தலைவர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.