July 5, 2025

Seithi Saral

Tamil News Channel

பாராஒலிம்பிக் பேட்மின்டனில் இந்தியாவுக்கு தங்கம்

1 min read

Gold for India in Paralympic Badminton

4.9.2021
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் பேட்மின்டனில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

ஜப்பானின் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 16 வது பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் எஸ்.எல். 3 பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரமோத் பகத், ஜப்பானின் தய்சுகேவை சந்தித்தார். இதில் 21-11, 21-16 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் மனோஜ் சர்கார், பிரிட்டனின் டேனியலிடம் 8-21, 10-21 என எளிதாக வீழ்ந்தார்.

பைனலில் பிரமோத், டேனியல் மோதினர். முதல் செட்டையில் 2-5 என பின்தங்கிய பிரமோத், பின் சிறப்பாக செயல்பட 21-14 என வென்றார். அடுத்து நடந்த இரண்டாவது செட்டில் பிரமோத் 3-11 என பின்தங்கினார். இதன் பின் எழுச்சி பெற்ற பிரமோத் அடுத்தடுத்து புள்ளிகள் குவித்தார். கடைசியில் டேனியலை முந்திய பிரமோத், இரண்டாவது செட்டை 21-17 என கைப்பற்றினார். 45 நிமிட போராடத்தின் முடிவில் 21-14, 21-17 என வென்ற பிரமோத், பாராலிம்பிக் பாட்மின்டனில் தங்கம் வென்ற முதல் இந்தியர் ஆனார்.

வெண்கலம்

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மனோஜ்-தய்சுகே மோதினர். முதல் செட்டை மனோஜ் 22-20 என போராடி வென்றார். அடுத்த செட்டை 21-13 என எளிதாக வசப்படுத்தினார். 47 நிமிட போட்டியில் முடிவில் 22-20, 21-13 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்ற மனோஜ், வெண்கலப்பதக்கம் கைப்பற்றினார்.

பதக்கப் பட்டியல்

ஒட்டுமொத்தமாக இந்தியா 4 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் பட்டியலில் 25 வது இடத்துக்கு முன்னேறியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.