June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை அமைக்கப்படும் – பிரதமர் மோடி அறிவிப்பு

1 min read

Bharathiyar seat to be set up at Banaras Hindu University – PM Modi

11.9.2021

பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பாரதியார் பெயரில் இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பாரதியார்

உத்தர பிரதேச மாநிலம் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் படிப்பிற்கான இருக்கை அமைக்கப்படும்; தமிழ் படிக்கவும் தமிழ் ஆய்வு மாணவர்களுக்கும் பாரதி இருக்கை பயன்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இன்று பாரதியாரின் 100-வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “சிறப்புவாய்ந்த சுப்ரமணிய பாரதியாரின் 100-வது நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது பெரும் புலமை, நாட்டுக்கு அவர் ஆற்றிய பன்முகப் பங்கு, சமூக நீதி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மீதான நன்னெறிகளை நாம் நினைவு கூறுகிறோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.