இந்தியாவில் மேலும் 28,591 பேருக்கு கொரோனா; 338 பேர் சாவு
1 min read
Corona for another 28,591 people in India; 338 deaths
12.9.2021
இந்தியாவில் ஒரு நாளில்மேலும் 28,591 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
கொரோனா
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ளது. கொரோனா வைரசின் 3-வது அலை செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் ஏற்படலாம் என்று நிபுணர்கள் தரப்பில் கூறப்படுவதால் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தீவிரமாக மத்திய, மாநில அரசுகள் கண்காணித்து வருகின்றன. தடுப்பூசி போடும் பணியையும் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்தியாவில் இன்று காலைவரை கடந்த 24 மணி நேரத்தில் 28,591- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 34,848 பேர் குணம் அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 338 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 36 ஆயிரத்து 921 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 84 ஆயிரத்து 921- ஆக உள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 42 ஆயிரத்து 655- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 24 லட்சத்து 09 ஆயிரத்து 345- ஆக உயர்ந்துள்ளது.