நீட் தேர்வில் இயற்பியல் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து
1 min read
Students commented that physics was a bit difficult in the NEED exam
12.9.2021
நீட் தேர்வில் இயற்பியல் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5 மணி வரை நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தம் 18 நகரங்களில் உள்ள 224 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
தமிழகத்தில் மட்டும் சுமார் 1.10 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர். வழக்கமான தேர்வு விதிமுறைகளோடு, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைளுடன் இணைந்து தேர்வு நடத்தப்பட்டது. தமிழ், மலையாளம், பஞ்சாபி ஆகிய மொழிகள் முதன் முறையாக சேர்க்கப்பட்டு மொத்தம் 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.
இந்தநிலையில், நாடு முழுவதும் 3,862 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு நிறைவு பெற்றது. கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றி தேர்வு நடைபெற்றது.
நீட் தேர்வு முடிவடைந்ததும் தமிழகத்தில் தேர்வு எழுதிய மாணவர்களிடம் நிருபர்கள் தேர்வு குறித்து கேட்டனர். அதற்கு பெரும்பாலான மாணவர்கள் தேர்வு எளிதாக இருந்தது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தேர்வு நடத்தப்பட்டது. கெடுபிடி ஏதும் இல்லை. ஆனால், இயற்பியல் பாட கேள்விகள் சற்று கடினமாக இருந்தது எனக் கூறினர். ஒரு சில மாணவர்கள் வேதியியல் பாட கேள்விகளும் கடினமாக இருந்ததாக கருத்து தெரிவித்தனர்.