ஆந்திராவில் இரும்பு உதிரி பாகங்களை கொண்டு மோடி சிலை
1 min read
Modi statue with iron spare parts in Andhra
13.9.2021
ஆந்திராவில் இரும்பு உதிரி பாகங்களை கொண்டு பிரதமர் மோடிக்கு 14 அடி உயர சிலை
அமைக்கப்பட்டுள்ளது.
மோடி சிலை
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தேனலி பகுதியை சேர்ந்த சிற்பக்கலை வல்லுனர்கள் வெங்கடேஷ்வர ராவ் மற்றும் அவரது மகன் ரவி தங்கள் குழுவுடன் இணைந்து பிரதமர் மோடியின் சிலை ஒன்றை வடிவமைத்துள்ளனர்.
பிரதமர் மோடியின் சிலை முழுவதும் வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் இரும்பு உதிரி பாகங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 14 அடி உயரத்தை கொண்ட அந்த சிலை 2 மாத கடின உழைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது.
இரும்பு உதிரி பாகங்களால் உருவாக்கப்பட்ட பிரதமர் மோடியின் இந்த சிலை பெங்களூருவில் நிறுவப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.