திருவிழாவிற்காக 1,500 டால்பின்கள் பலி; கடல் ரத்தமானது
1 min read
1,500 dolphins killed for festival; The sea is bloody
15.9.2021
டென்மார்க்கின் வடக்கு அட்லாண்டிக் பகுதியில், பாரம்பரியத் திருவிழாவிற்காக 1,500க்கும் மேற்பட்ட டால்பின்கள் கொன்று குவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டால்பின்கள்
வடக்கு அட்லாண்டிக் கடற்பகுதியில், டென்மார்க்கின் வடக்கில் பரோயே தீவுக்கூட்டம் உள்ளது. இந்தத் தீவுகளில் வசிக்கும் மக்கள் தங்களது பாரம்பரியத் திருவிழாவைக் கொண்டாடும் விதமாக, கடற்பகுதிக்கு அருகே 1,500 டால்பின்களை ஒரே நேரத்தில் வேட்டையாடி உள்ளனர். கடல்வாழ் சூழலுக்கு மிகுந்த நன்மையைத் தரும் டால்பின்கள் கொல்லப்பட்டதால் அந்தத் தீவுகளின் கரைகள் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தன.
ஒரே நேரத்தில் இவ்வளவு எண்ணிக்கையில் டால்பின்கள் வேட்டையாடப்பட்டது சூழலியல் ஆர்வலர்களிடையே கண்டனத்தை எழுப்பியுள்ளது. ‘சூழலியல் சமநிலையைப் பேணும் விதமாக, இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்’ என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.