கடந்த 6 நிதியாண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி வாராக்கடன் வசூல்; நிர்மலா சீதாராமன் பேட்டி
1 min read
Rs 5 lakh crore weekly debt collection in last 6 financial years; Interview with Nirmala Sitharaman
16.9.2021
கடந்த 6 நிதியாண்டுகளில் வங்கிகள் ரூ.5,01,479 கோடி வாராக்கடனை வசூல் செய்துள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வாராக்கடன்
வாராக்கடன் பிரச்னையை தீர்க்க தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் வழங்கும் பத்திர ரசீதுகளுக்கு மத்திய அரசு 30,600 கோடி ரூபாய் உத்தரவாதம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
கடந்த 6 நிதியாண்டுகளாக மத்திய அரசு, அங்கீகாரம், தீர்மானம், மறு மூலதனம் மற்றும் சீர்திருத்தங்கள் ஆகிய கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியது. இதனால் வங்கிகள் ரூ.5,01,479 கோடி வாராக்கடன் வசூல் செய்தன. அதில் கடந்த 2018 மார்ச் முதல் 3.1 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2018 ம் ஆண்டில் 21 பொதுத்துறை வங்கிகளில் 2 வங்கிகள் மட்டுமே லாபத்தில் இயங்கின. தற்போது 2 வங்கிகள் மட்டுமே நஷ்டத்தை சந்தித்து உள்ளன.பொதுத்துறை வங்கிகள், கடன் மற்றும் ஈவுத்தொகை மூலம் ரூ.58,697 கோடியை திரட்டி உள்ளன.
தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்துடன் இணைந்து, இந்திய கடன் தீர்மான நிறுவன கழகத்தையும் அமைக்க உள்ளோம். இதன் 49 சதவீத பங்குகள் பொதுத்துறை வங்கிகளிடம் இருக்கும். எஞ்சியவை தனியார் நிறுவனங்களிடம் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.