திருத்தணி அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து ரூ.4.50 லட்சம் கொள்ளை
1 min read
ATM near Thiruthani 4.50 lakh robbery by breaking machine
17.9.2021
திருத்தணி அருகே ஏ.டி.எம். இயந்திரத்தை வெல்டிங் வைத்து உடைத்து ரூ.4.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
ஏ.டி.எம்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் கல்லூரிக்கு அருகில் தனியாருக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது.
காவலர், சிசி டிவி கேமரா பொறுத்தப்படாத அந்த ஏடிஎம் மையத்தில் புகுந்த மர்ம நபர்கள் வெல்டிங் வைத்து உடைத்துள்ளனர்.
இந் நிலையில் இன்று காலை எடிஎம் மையத்திற்கு சென்ற வாடிக்கையாளர்கள் எடிஎம் மிஷின் வெலிடிங் வைத்து உடைத்து அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ரூ.4.50 லட்சம்
சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் தாலுக்கா போலீசார் ஏடிஎம் மையத்திற்கு அருகில் உள்ள தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். இதே நேரத்தில் உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.4.50 லட்சம் பணம் இருந்ததாக தனியார் வங்கி அலுவலர்கள் தெரிவித்தனர். எப்போதும் பரப்பாக காணப்படும் சென்னை திருப்பதி தேசிய நெடுஞாலை பகுதியில் இருந்த ஏடிஎம் மையத்தில் வெல்டிங் வைத்து உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.