உள்ளாட்சி தேர்தல்: அதிமுக – பாஜ., பேச்சுவார்த்தை
1 min read
Local elections: AIADMK – BJP, talks
19.9.2021
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க., மற்றும் பாரதீய ஜனதா இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
ஊரக உள்ளாட்சி தேர்தல்
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9-ந் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. ஓட்டு எண்ணிக்கை அக்.,12ல் நடக்கிறது. இதற்காக ஓட்டு எண்ணிக்கை செப்டம்பர் 15-ந் தொடங்கியது. வரும் 22ம் தேதியுடன் முடிகிறது. 23ம் தேதி பரிசீலனை நடைபெற உள்ளது. 25ம் தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் ஆகும்.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து அ.தி.மு.க., மற்றும் பா.ஜ.க. இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அதிமுக சார்பில் நத்தம் விஸ்வநாதன், தங்கமணியும் பா.ஜக. சார்பில் வேதா. சுப்ரமணியன் பலராமன் ஆகியோர் பங்கேற்றனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கும் இந்த பேச்சுவார்த்தையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இடங்கள் ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடந்தது.