காணொளி, காணொலி…- இது சரியா? / முத்துமணி
1 min read
Tamil Ilakkiyam by MUthumani
19.9.2021
-காணொளி, காணொலி…
இச்சொற்கள் இரண்டுமே சரியா? தவறா? ..
Audio
Video
இப்படி ஆங்கிலத்தில் வழங்கிவரும் தொடர்களில் வரும் ஆடியோ என்பதற்கு ஒளி எனவும் வீடியோ என்பதற்குக் காட்சி என்பதையும் இணையாக வழங்கி வருகிறோம்.
பிறகு எங்கிருந்து காணொளி அல்லது காணொலி… யாரோ செய்த தவறு..
காணொலி.. என்ற சொல் காணக்கூடிய ஒலி என்பதுதான் பொருள்படும். அதாவது காணத்தக்க ஒலி… ஒலியைக் காண முடியுமா? ஒலிக்கு உருவம் கிடையாதே. ஒலியைக் காதால் கேட்கத்தான் முடியும். ஒலி அதிர்வுகளை ஏற்படுத்துவதால் நாம் மெய்யால் உணரத்தான் முடியும்… ஒருபோதும் பார்ப்பதற்கு இல்லை..
அடுத்தது காணொளி. இச்சொல்லுக்கு காணக்கூடிய ஒளி அல்லது காணத்தக்க ஒளி என்று பொருள் கொள்ளலாம். இதுவும் சிரிப்பைத் தருகிறது ஒளி என்பது கண்ணால் கண்டு உணர்வது தானே இதைக் காணொளி என்றால் காண முடியாத ஒளியும் இருக்கிறதா? காண முடியாததை எப்படி ஒளி என்று சொல்ல முடியும்?
இந்த இரண்டையும் இணைத்து காணொளி அல்லது காணொளி என்று எழுதி நம்மால் கேட்கக் கூடிய ஒளியும் பார்க்கக்கூடிய காட்சியையும் இணைந்து வழங்கும் ஊடகங்களைக் குறிக்கிறன்றனர். காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்!!! ஆங்கிலத்தில் வீடியோ கான்பரன்ஸ் என்று சொல்வர். காணொளி மூலம் கற்பித்தல் நடைபெறுகிறது..
காட்சி ஊடகம் என்று பேசிவிட்டு…. வானொலி ஒலி ஊடகம்.. டெலிவிஷனைத் தொலைக்காட்சி என்று தானே கூறுகிறோம்.. அச்சொல்லில் காட்சியோடு சேர்ந்து ஒலியும் அடங்கிவிடுகிறது என்று வைத்துக் கொள்ளலாம்… அப்படியானால் காட்சி என்ற சொல்தானே மிகச்சரியாக பொருந்தி வருகிறது? காட்சி என்பதிலேயே பார்க்கவும் முடியும் கேட்கவும் முடியும் என்று கொள்ள வேண்டும் தொலைவிலிருந்து படம் பார்க்கவும் பாட்டு கேட்கவும் பயன்படுவதுதான் தொலைக்காட்சி.
அப்படியானால் இவர்கள் காணொளி காணொலி என்று நினைப்பதற்கு மாற்றாக…. காட்சியொலி…. என்பது மட்டுமே பொருந்தும்… திருமலை மன்னன் மஹாலில் ஒலி-ஒளிக் காட்சி நடைபெறும் என்று சொல்லும் இடத்தில் கூட காட்சியும் ஒளியும் ஒன்று என்பதால்… காட்சியொலி என்று அழைப்பதே சரியானது… அதாவது காட்சியும் ஒளியும் இணைந்த என்பது பொருள்….
-முத்துமணி