தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா…? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
1 min read
Is it not possible to hold local elections in Tamil Nadu? Supreme Court question
20/9/2021
தமிழகத்தில் தேர்தலை நடத்த என்ன பிரச்சினை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அவகாசம் வழங்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது.
உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 7 மாதம் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள்
நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலை நடத்தும் போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா…? என கேள்வி எழுப்பினர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 7 மாதங்கள் அவகாசம் வழங்க முடியாது. தேர்தலை நடத்த என்ன பிரச்சினை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அவகாசம் வழங்க முடியாது என கூறினர்.
சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன; ஆகவே, 7 மாதகாலம் அவகாசம் கேட்கிறோம், தற்போது அவ்வளவு கூட தேவையில்லை, 3-4 மாதகாலம் அவகாசம் வழங்கினால் கூட போதுமானது என மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது.